-->

Saturday 21 May 2011

அரசகேசரிப் பிள்ளையார் கோயிலில் இரவிரவாக நடக்கிற திருப்பணி வேலைகள்..

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயிற் குடமுழுக்கு விழாவை ஒட்டி இரவிரவாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்று 15.05.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கும் தொடர்ந்து கொங்கிறீற் போடும் வேலைகள்நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆலய தொண்டர்கள் பலரும்.. தொழிலாளர்களும்இணைந்து செய்த இவ்வேலைகள் இன்று இச்செய்தி எழுதும் வரை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

புலம்பெயர் நர்டுகள் சிலவற்றில் உள்ள சிலர் சில தவறான கருத்துக்களைப்பரப்பி வருவதாகவும் இதன் போது ஆலய அறங்காவலர் சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கிற ச.க.முருகையா கவலை வெளியிட்டார். ஆகவே, உண்மையை எடுத்துரைக்க வேண்டிய தேவை இருப்பதாயும் சொன்னார். இதே வேளை இந்தியாவிலிருந்து வரப்பிரதசர்மா ஊடாக, கும்பாபிஷேகத் திரவியங்கள் கொண்டு வரப்படவுள்ளதாயும் தெரியவருகிறது.

இப்பணிகளில் எல்லா அடியவர்களும் இணைந்து பணியாற்றற வேண்டும் என்பதே எமது ஆவலாகும். இன்று நள்ளிரவு வேளையில் எடுத்த சில படங்கள் இணைக்கப்பட:டுள்ளன.


தி.மயூரகிரி சர்மா
 

0 comments:

Post a Comment

 

களத்தில்

எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடுவார்த்தைகளாய்

கண்டிப்பாக

தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.