-->

விதிகள்


வணக்கம்,

ரசகேசரியான் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (25.09.2010 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை  மீறும் பதிவுகள் மீதோ,பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.



ரசகேசரியான் இணைய கருத்துக்களத் தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக் கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல் லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு அரசகேசரியான் இணையம் பொறுப்ப ல்ல + பொறுப்பேற்காது.

அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினரு டையதே - அன்றி - அரசகேசரியான் நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் அரசகேசரியான் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம்.








) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்
 கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும்,கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள்,ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும். வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம்  றிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்) சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

2. தலைப்பு
நீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும். தலைப்புகள் நீளமானவையாக இருத்தல் ஆகாது.
சுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்

கருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது. தலைப்புகள் பின்வரும் வகையில் அமைதல் ஆகாது: வன்முறையையும், வக்கிரங்களையும் தூண்டும் வகையிலான தலைப்புகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள்

3. மொழி
கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:
அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும். அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும் அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.
4. உரையாடல்
"நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது. "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

5. மூலம்
கருத்துக்களத்தில் உங்களால் இணைக்கப்படும் ஆக்கம், உங்கள் சுய ஆக்கம் இல்லாது விடின்: அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்
அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும் அது எப்போது எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும். மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது உங்களது ஆக்கம் இல்லை என்பதையாவது குறிப்பிடல் வேண்டும்அதேபோல், கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது: மூலம் குறிப்பிடப்பட வேண்டும். அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.
6. பொறுப்பு
கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு இணையம் பொறுப்பேற்காது. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவரவரே (உறுப்பினர்கள்) முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவரவர் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும்,விளைவுகளுக்கும் அரவரவரே பொறுப்பேற்க வேண்டும்.

1. எழுத்து
கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் unicodeஎழுத்துருவில் எழுதப்படல் வேண்டும். கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும். தலைப்புகளுக்கு மட்டும் "அளவு 2" இனை பயன்படுத்தலாம். வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) - சரிந்த - கோடிட்ட" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.
2. நிறம்
வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)



  • மூலம்: யாழ் இணையம்
 

களத்தில்

எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடுவார்த்தைகளாய்

கண்டிப்பாக

தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.