-->

Wednesday 23 March 2011

"கருணை நிறை காமாட்சி" நூல் வெளியீடு


 நீர்வை.தி.மயூரகிரி சர்மாவால் எழுதப் பெற்ற கருணை நிறை காமாட்சி என்ற நூல் நீர்வேலி காமாட்சியம்பாள் இந்து பரிபாலன சபையினரால் வெளியீடு செய்யப்பெற உள்ளது. நாளை மறுதினம் மாலையில் இந்நிகழ்வு நீர்வேலி வடக்கு காமாட்சியம்பாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

பேராசிரியர். கலாநிதி.தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நல்லையாதீன குருமஹாசந்நிதானம், முதுநிலை விரிவுரையாளர் திருமதி சுகந்தினி முரளீதரன், நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி முதல்வர் இ.குணநாதன், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர். ச.லலீசன், ஆகிய பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Sunday 13 March 2011

நீர்-வில் தான் நீர்வேலியானதா?

நீர்-வில் தான் நீர்வேலியானதா? ஒரு சிந்தனைக்குரிய ஆய்வு

இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் தர்மபத்தினியாகிய சீதாதேவியை மீட்கும் பொருட்டு, இராவணனுடன் யுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான வானரசேனையுடன் இலக்குவன், ஹநுமான் மற்றும் விபீஷணனின் துணையுடன் சேது பாலம் அமைத்து இலங்கைக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு சேது பந்தம் அமைத்து இலங்கை வந்த ஸ்ரீ ராமரும் அவர் தம்சேனையும் இராவணனையும் அவனோடு கூடிய அசுர கூட்டத்தையும் துடைத்தழித்தனர். சீதாதேவி மீட்கப்பட்டாள்.
 

களத்தில்

எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடுவார்த்தைகளாய்

கண்டிப்பாக

தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.